சினிமா
வாத்தி திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? வெற்றி விழாவில் மனம் திறந்த வெங்கி அட்லூரி!

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் இந்த மாதம் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டை விட தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் படம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தயாரிப்பாளரும் இயக்குநரும் சமீபத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் பேசி உள்ளனர்.

#image_title
வாத்தி திரைப்படம் இதுவரை உலகளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் விரைவில் 100 கோடி கிளப்பில் இந்த படம் இணையும் என்றும் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
வாத்தி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். வில்லனாக நடிகர் சமுத்திரகனி நடித்திருந்தார். வாத்தி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக இருந்த நிலையில், வாத்தி படக் குழுவுக்கு சமூக வலைதளம் மூலமாக தனது வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தார்.

#image_title
கல்வியின் முக்கியத்துவத்தையும் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் மீது நடத்தும் மோசடி அரசியல் குறித்தும் இந்த படத்தில் வெங்கி அட்லூரி கூறியிருந்தார். இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழ்நாடு நிலவரம் தனக்கு தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.