சினிமா
நடிகை ஷகிலாவின் பயோ-பிக்… இந்திய அளவில் டிரெண்டான டிரெய்லர்!

தென்னிந்தியத் திரைப்படத் துறையில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் ஷகிலா. அவரின் படங்களைப் போல வாழ்க்கையும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானதுதான். இந்நிலையில் அவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘ஷகீலா’ என்கிற பெயரில் பாலிவுட்டில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் இந்தப் படம் உருவாகியிருந்தாலும், தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிகிறது.
வரும் 25 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் இந்தப் படத்தில் ஷகிலாவாக நடித்திருப்பது பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா. அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிகர் பஞ்சஜ் திரிபாதி நடித்துள்ளார். இந்திரஞ்சித் லங்கேஷ் இப்பட்டத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஷகிலா கதாராப்பத்திரத்தில் நடிக்கும் ரிச்சா, ‘உண்மையில் ஷகிலா ஒரு தைரியமான ஆன்மா. அவரின் காலத்தில் திரைத் துறையையே புரட்டிப் போட்டவர் ஷகிலா. மக்களுக்குத் தெரிந்ததைவிட அவரது வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. உயிருடன் இருக்கும் ஒரு ஸ்டார் குறித்தான படத்தில் நடிப்பது எனக்கு கூடுதல் பொறுப்புணர்வைக் கொடுத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.