சினிமா
எல்லை மீறும் ரஜினிகாந்த் vs விஜய் ரசிகர்கள் சண்டை.. குடும்பத்தை இழுத்து ரொம்பவே கேவலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் திடீரென ட்விட்டரில் எல்லை மீறிய சண்டையை ஆரம்பித்து போட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்கள் போர்வையில் இரு நடிகர்களின் ஐடி விங்கும் தான் இப்படியொரு கேவலமான சண்டையை செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வந்த நிலையில், சமீப காலமாக ரஜினியை விட விஜய் தான் நம்பர் ஒன் தமிழ் நடிகர் என்றும் இன்றைய சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றும் சர்ச்சையை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பூதாகரமாக கிளப்பி வருகின்றனர்.
One hero is earning & running his life copying superstar rajini sir style..
Unable to understand why his fans are trending – ve tag 🐿️#KollywoodPrideRAJINI#SethaAnilKunjuVIJAY pic.twitter.com/GW5HQYOM7k
— வானவராயன் (@Itsme0911) March 5, 2023
மேலும், இந்த சண்டையில் ரஜினி ரசிகர்களுடன் அஜித் ரசிகர்களுடன் ஒட்டிக் கொண்டு விஜய் ரசிகர்களுடன் சண்டைப் போட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று #SethaAnilKunjuVIJAY மற்றும் #SethaPaambuRAJINI என இரு மோசமான ஹாஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் கடும் சண்டை போட்டு வருகின்றனர்.

#image_title
விஜய், ரஜினியை ட்ரோல் செய்வதை தாண்டி அவர்களது குடும்பத்தினரையும் பிறப்பையுமே ஆபாசமாக சித்தரித்து எல்லை மீறி செல்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்காமல் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து இருந்தால் இதுபோன்ற சமூக வலைதள சண்டை பெரிதளவில் சென்றிருக்காது என நியூட்ரல் ஃபேன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியான நிலையில், வசூலில் வாரிசு படம் துணிவு படத்தை முந்திய நிலையில், ஜெயிலர் திரைப்படம் வாரிசு படத்தின் வசூலை பீட் பண்ணும் என்றும் ஜெயிலர் மற்றும் லியோ படத்துக்கு இடையே தான் போட்டி என்றும் ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர்.