சினிமா
லியோ படத்தில் ஹாலிவுட் ரேஞ்ச் விஷுவல்.. ஒளிப்பதிவாளர் சொன்ன ஹாட் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் உயர் தர கேமராவை பயன்படுத்தி வருவதாகவும் விஷுவல் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், சாண்டி, மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ் என நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் நடித்து வருகிறது.

#image_title
காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு க்ரூப்பாக ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.
வரும் மே மாதத்துடன் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க பக்காவாக பிளான் போட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பணியாற்றி வருகிறார்.
வாரிசு திரைப்படம் 300 கோடி வசூல் செய்தாலும், அந்த படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. பீஸ்ட், வாரிசு என தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்கள் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், லியோ படம் நிச்சயம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் லோகேஷ் கனகராஜ் உழைத்து வருகிறார்,

#image_title
இந்நிலையில், இந்த படத்தில் ஹைடெக் கேமராவான Red V RAPTOR XL பயன்படுத்தப்பட்டு வருவதாக படத்தின் கேமராமேன் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே 400 கோடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தை போலவே விஜய்யின் லியோ படமும் 500 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது.