உலகம்
2023 வேலைநீக்க ஆண்டா? ஐபிஎம் 3900ஐ அடுத்து 3000 பேரை வேலை நீக்கம் செய்யும் இன்னொரு நிறுவனம்!

2023 ஆம் ஆண்டு பிறந்து 26 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலையில் தூங்கி எழுந்து மெயில் பார்த்தால் தான் நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஊழியராக இருக்கின்றோமா இல்லையா என்பது தெரியவரும் என்ற நிலைமைக்கு ஒவ்வொரு ஊழியரும் தள்ளப்பட்டு விட்டனர். இரவோடு இரவாக வேலை நீக்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் பல ஊழியர்கள் காலையில் தூங்கி எழுந்தவுடன் தான் வேலையில் இல்லை என்பதை நினைத்து அச்சப்பட்டு கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் வேலையில்லாமல் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியா உள்பட பல நாடுகளில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இந்த சதவீதம் அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

#image_title
அந்த வகையில் இன்று காலை ஐபிஎம் நிறுவனம் 3900 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் தற்போது பிரபல ஜெர்மனி நிறுவனம் எஸ்ஏபி 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து எஸ்ஏபி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி லூகா மியூசிக் என்பவர் கூறிய போது, ‘நிறுவனத்தில் பணிபுரியும் 2.5% ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வகையில் 3000 ஊழியர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் முக்கிய வணிகத்தை வலுப்படுத்த, இலக்கை மறு சீரமைப்பு செய்ய இந்த வேலைநீக்க நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி 2024 ஆம் ஆண்டிலும் சில வேலைநீக்க நடவடிக்கை இருக்கும் என்று அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினந்தோறும் ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்து வேலை நீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இளைஞர்கள் தற்போது சொந்த தொழிலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.