வீடியோ
விஜய் ஆண்டனியின் கொலைகாரன் டிரெய்லர் ரிலீஸ்!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள கொலைகாரன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், நாசர் மற்றும் அஷிமா நர்வால் நடித்துள்ள கொலைகாரன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டார்.
மே மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் ஆண்டனி தனது காதலிக்காக பழிவாங்கும் கொலைகாரனாகவும் நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் வழியாக படக்குழுவினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கும் த்ரில்லர் படமாக கொலைகாரன் உருவாகி உள்ளது என சமீபத்தில் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.