தமிழ்நாடு
12 சிறப்பு ரயில்கள் ரத்து: சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தகவல்

பராமரிப்பு காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
* சேலம் வழியாக செல்லும் கோவை-நிஜாமுதீன் சிறப்பு ரயில் (வண்டி எண் 06077) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து.
* நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரயில் (06078) வருகிற 14 மற்றும் 21-ந் தேதிகளிலும், கோரக்பூர்-கொச்சிவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 02511) 11, 15, 16, 18, 22 மற்றும் 23-ந் தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் கொச்சிவேலி-கோரக்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 02512) 13, 14,18,20 மற்றும் 21-ந் தேதிகளிலும் ரத்து.
* பரோனி-எர்ணாகுளம் சிறப்பு ரயில் (வண்டி எண் 02521) 12, 19 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் இருந்து செல்லும் எர்ணாகுளம்-பரோனி சிறப்பு ரயில் (வண்டி எண் 02522) 16, 23 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம்- நிஜாமுதீன் சிறப்பு ரயில் (வண்டி எண் 06167) 13, 20 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06168) 16, 23 ஆகிய தேதிகளிலும் ரத்து.
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரயில்கள் உள்பட சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.























