Connect with us

தமிழ்நாடு

சிபிஐயை விசாரிக்க சொல்லுங்கள்.. உதயநிதிதான் காரணம்.. அண்ணாமலை காட்டம்

Published

on

சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு அரசு மீது காட்டமான விமர்சனங்களை அவர் வைத்துள்ளார், அதில், நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் திமுகவிற்கு கைவந்த கலை. “இந்தி தெரியாது போடா” என்று முதல்வரின் மகன் டி-ஷர்ட் கலாச்சாரத்தை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைக்க… விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி… வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கிவைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், “வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?” என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரச்சனையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை. பாஜக மொழித் திணிப்பு செய்வதாக, குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் அவசர குடுக்கை ஆர் எஸ் பாரதி அவர்களே, அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, திமுக செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் “தமிழை கட்டாயப் பாடம்” ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம். மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.

வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது அவசர குடுக்கை ஆர்.எஸ் பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். திமுகவின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு. வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழகத்திற்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள். இப்படி, தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? காவல்துறை அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளை விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும். தாமதப்படுத்தியது யார்? என்ற அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டிஜிபி அவர்கள், திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சிபிஐ விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரியவரும்.

நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

வேலைவாய்ப்பு5 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா5 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா5 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா6 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா6 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா6 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா8 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்8 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா9 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு10 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!