தமிழ்நாடு
சென்னை, மதுரை தொடர்ந்து சேலத்திற்கும் வருகிறது மெட்ரோ லைட்!

சென்னையில், மதுரையைத் தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ லைட் ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டு வருவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை, மெட்ரோ ரயில் இல்லாத வழித்தடங்களுடன் இணைக்கும் விதமாக மெட்ரோ லைட் ரயில் சேவையை அமைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

சென்னையைத் தொடர்ந்து விரைவில் தூங்கா நகரம் மதுரையில் மட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக www.bhoomitday.com இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
மேலும் சென்னையைத் தொடர்ந்து மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வழித்தடத்தில் மெட்ரோ லைட் ரயில் சேவை அமைப்பதற்கான பணிகள் தான் நடைபெற உள்ளது.
தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ லைட் சேவை தொடங்கப்பட உள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது சேலத்தில் மெட்ரோ லைட் ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் மாத்திற்குள் அதற்கான ஆய்வறிக்கை தயாராகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ லைட் என்பது முழுமையான மெட்ரோ ரயில் இல்லை என்றாலும், ட்ராம் ரயில் போன்ற ஒரு சேவையாக இருக்கும்.
மெட்ரோ லைட் ரயில் சேவையை டெல்லி, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.