Connect with us

சினிமா

ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. இந்த நடிகை தான் அஜித்துக்கு ஏகே 62 படத்தில் ஜோடியாம்?

Published

on

ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் என்கிற பெரிய போட்டியே நிலவி வருகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா தான் ஜோடி என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், பல மாதங்கள் கழித்து சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்து ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யாரு என்கிற கேள்வி எழுந்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்தில் நயன்தாரா தானே ஜோடியாக நடிப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்டாக த்ரிஷாவின் பெயர் முதலில் அடிபட்டது.

ஆனால், த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக்க முடிவு செய்தனர். ஆனால், ஐஸ்வர்யா ராய் அஜித்துடன் நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லையாம்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷை அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்கிற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகை சாய் பல்லவியின் பெயரும் அடிபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மும்பையை சேர்ந்த கேங்ஸ்டர் படமாக ஏகே 62 இருக்கும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். அடுத்த மாதம் பட பூஜை போடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹீரோயின் யார் என்கிற அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறுகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?