Connect with us

வணிகம்

ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை தொகை ரூ.75 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு வழங்கிய மத்திய அரசு! தமிழ்நாட்டுக்கு எவ்வளவு?

Published

on

ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.75,000 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும்.

கடந்த 28.05.2021ம் தேதி நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று, மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 2020-21ம் நிதியாண்டில் இதேபோன்ற வசதிக்கு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் படி இந்த தொகை வழங்கப்பட்டது. அப்போது இதே ஏற்பாட்டின் படி மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இந்த ரூ.1.59 லட்சம் கோடி, இழப்பீடு ரூ.1 லட்சம் கோடிக்கும்(வரி வசூல் அடிப்படையில்) அதிகமாக இருக்கும். இது இந்த நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த தொகை ரூ.2.59 லட்சம் கோடி, 2021-22ம் நிதியாண்டில் ஏற்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவ, மத்திய நிதியமைச்சகம் 2021-22ம் நிதியாண்டில் ரூ.75 ஆயிரம் கோடியை(இந்த நிதியாண்டின் மொத்த பற்றாக்குறையில் சுமார் 50 சதவீதம்) ஒரே தவணையாக இன்று வழங்கியது. மீதத் தொகை, 2021-22ம் ஆண்டு இரண்டாவது பாதியில் சீரான தவணையாக வழங்கப்படும்.

இந்த நிதி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொது செலவு, சுகாதார கட்டமைப்பு மற்றும் உள்ள கட்டமைப்பு திட்டங்களை திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை தொகையின் விவரத்தை கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம்.

வரிசை எண்மாநில / யூ.டி.க்களின் பெயர்ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறை வழங்கல் (ரூபாய், கோடியில்)
5 ஆண்டு காலம்2 ஆண்டு காலம்மொத்தம்
1ஆந்திரா1409.67133.761543.43
2அசாம்764.2972.52836.81
3பீகார்2936.53278.653215.18
4சத்தீஸ்கர்2139.06202.982342.04
5கோவா364.9134.63399.54
6குஜராத்5618533.16151.1
7ஹரியானா3185.55302.283487.83
8இமாச்சல பிரதேசம்1161.08110.181271.26
9ஜார்க்கண்ட்1070.18101.551171.73
10கர்நாடகா7801.86740.318542.17
11கேரளா3765.01357.264122.27
12மத்தியப் பிரதேசம்3020.54286.623307.16
13மகாராஷ்டிரா5937.68563.436501.11
14மேகாலயா60.755.7666.51
15ஒடிசா2770.23262.873033.1
16பஞ்சாப்5226.81495.975722.78
17ராஜஸ்தான்3131.26297.133428.39
18தமிழ்நாடு3487.56330.943818.5
19தெலுங்கானா1968.46186.792155.25
20திரிபுரா172.7616.39189.15
21உத்தரபிரதேசம்3506.94332.783839.72
22உத்தரகண்ட்1435.95136.261572.21
23மேற்கு வங்கம்2768.07262.663030.73
24டெல்லியின் யு.டி.2668.12253.182921.3
25ஜம்மு-காஷ்மீரின் யு.டி.1656.54157.191813.73
26புதுச்சேரியின் யு.டி.472.1944.81517
மொத்தம்:68500650075000

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Vibetruyen miễn trừ mọi trách nhiệm liên quan đến các nội dung trên website này.