Connect with us

இந்தியா

உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து தானாக ரூ.20 கழிகிறதா.. அப்படியென்றால் இதுதான் காரணம்!

Published

on

உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாக 2 ரூபாய் கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பெரும்பாலும் வங்கி கணக்கில் உள்ள தொகையை, வரவு செலவுகளை அவ்வபோது அனைவரும் கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் ஒரு சிலர் தங்களது வங்கி கணக்கில் ரூபாய் 20 தானாக கழிந்திருப்பதை கண்டுபிடித்திருப்பார்கள். அது எதனால் என்பது தெரியாமல் இருக்கும் நிலையில் சிலர் வங்கி நிர்வாகத்தை அணுகி விளக்கம் கேட்டு இருப்பார்கள்.

அந்த வகையில் உங்களுக்கு தானாக ரூ.20 கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பொது மக்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டில் இரண்டு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒன்று பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, இன்னொன்று பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஒரு விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் விபத்து காரணமாக ஏற்படும் ஊனத்திற்கு காப்பீடு வழங்குகிறது. இது ஒரு வருட காப்பீடாக இருக்கும். ஆண்டுதோறும் இதனை புதுப்பிக்க வேண்டும்.

இந்த காப்பீடு திட்டத்திற்காக ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான ஒரு வருட காலப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் முழு வருடாந்திர பிரீமியத்தை செலுத்த வேண்டும். வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் பிரிமியம் தொகையான ரூ.20 ஆட்டோ டெபிட் மூலம் கழிந்துவிடும்.

இந்த திட்டத்திலிருந்து வெளியேற விரும்பும் அந்த ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வங்கிக்கு எழுத்துபூர்வமாக தகவல் அளித்தால் அவர்களது காப்பீடு திட்டம் நிறுத்தப்படும். இதற்காக, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்துடன் உங்கள் கணக்கு இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பிரீமியம் கட்டணத்தை நிறுத்துமாறு கோரலாம்.

மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் தேவையான நிதி இல்லை என்றால், பிரீமியத்தை தானாக டெபிட் செய்வது சாத்தியமில்லை என்பதாலும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?