சினிமா செய்திகள்
’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அட்டகாசமான வீடியோ பாடல்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் முழு பணி முடிந்து சென்சாருக்கு அனுப்பப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை வந்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி அவர்கள் பத்திரிகையாளர் மத்தியில் ’உயிரே’ என்று தொடங்கும் பாடலை வெளியிட்டார். மரகதமணி இசையில் மதன்கார்க்கி எழுதிய இந்த பாடலை பார்த்த பத்திரிகையாளர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்து ராஜமௌலிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அலியாபட், ஸ்ரேயா சரண், அஜய்தேவ்கான் உள்ளிட்ட பலர் இருக்கும் இந்த வீடியோ பாடல் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதற்கு இந்த ஒரு பாடலே சாட்சி என்றும் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.