உலகம்
மெக்டொனால்டு நிறுவனத்தின் இந்த முயற்சி சக்ஸஸ் ஆனால் வேலைநீக்கம் உறுதி.. திடீரென முளைத்த சிக்கல்!

உலகின் முன்னணி ஓட்டல் நிறுவனங்களில் ஒன்றான மெக்டொனால்டு நிறுவனம் தற்போது ஒரு புதிய முயற்சியை செய்து வருவதாகவும் இந்த முயற்சி சக்சஸ் ஆனால் மெக்டொனால்டு நிறுவனத்தில் பணிபுரியும் பல ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவதற்கு காரணம் மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் பணவீக்கம், வட்டி விகிதம், நிறுவனங்களின் செலவு உள்ளிட்ட பல காரணங்களால் வேலை நீக்கம் செய்யப்படுவது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த நிலை ஒரு சில ஆண்டுகளில் மாறிவிடும் இடம் குறிப்பாக 2025 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார மந்த நிலை என்பது மாறிவிடும் என்று கூறப்படுகிறது. பணவீக்கமும் படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்க்கு வந்துவிடும் என்றும், மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேலைவாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் மெக்டொனால்டு நிறுவனம் எடுத்திருக்கும் ஒரு புதிய முயற்சி காரணமாக வாழ்நாள் முழுவதும் அந்த நிறுவனத்தில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மெக்டொனால்டு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் முழுக்க முழுக்க ரோபாட் சேவை செய்யும் உணவகத்தை ஆரம்பித்து உள்ளது. சோதனை முயற்சியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் இந்த முயற்சி சக்சஸ் ஆனால் மெக்டொனால்டு நிறுவனத்தில் உள்ள பல ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mc donald
முழுக்க முழுக்க தானியங்கி ரோபோட்டால் அமைந்துள்ள இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ரோபோட்டில் உள்ள தானியங்கி திரையின் மூலம் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்யலாம், அவர்களுடைய உணவு தயாரானதும் கன்வேயர் பெல்ட் மூலம் அவர்களுடைய இருப்பிடத்திற்கு ஆர்டர் செய்த உணவு வரும் என்றும் கூறப்படுகிறது.
ரோபோக்கள் உணவு ஆர்டர் எடுப்பது முதல் பணத்தை வாங்கி போடுவது வரை அனைத்து வேலைகளையும் செய்து விடும் என்பதால் மனிதர்களுக்கு அங்கு வேலையே இருக்காது என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி எந்த ஒரு சிறு தவறும் சேவையில் ஏற்படாது என்றும் முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் வகையில் ரோபோக்கள் பணிபுரியும் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து கிளைகளிலும் ரோபோட்க்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்றும் ஒரு சில முக்கிய கிளைகளில் மட்டுமே தானியங்கி ரோபோக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யப்படும் என்றும் மெக்டொனால்டு நிறுவனம் விளக்கம் அளித்தாலும் நாளடைவில் முழுக்க முழுக்க ரோபோக்களால் கொண்ட மெக்டொனால்டு ஹோட்டல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது வேலை நீக்க நடவடிக்கை நிச்சயம் என்றும் ஒருவேளை வேலை நீக்க நடவடிக்கை குறைவாக இருந்தாலும் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்கும் திட்டம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் மெக்டொனால்டு நிறுவனம் மட்டுமின்றி மற்ற ஹோட்டல் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பெரும் அச்சத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.