வணிகம்
கூகுள் உடன் இணைந்து குறைந்த விலையில் ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

கூகுள் உடன் இணைந்து, குறைந்த விலையில் ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் இண்டாஸ்ட்ரீஸ் திட்டமிட்டு வருகிறது.
தற்போது ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த விலையில் 4ஜி ஃபியூச்சர் போன்களை விற்று வந்தாலும் அதில் அனைத்து ஆண்டிராய்டு செயலிகளையும் பயன்படுத்த முடியாது.

எனவே 10 கோடி குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ரிலையன்ஸ் ஜியோ வடிவமைத்து வெளியிட உள்ளது. இந்த போன்களுக்கான ஆண்டிராய்டு இயங்குதளத்தை, கூகுள் நிறுவனம் வழங்குகிறது. அண்மையில் கூகுள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்த 33,737 கோடி ரூபாயும் இதில் அடங்கும்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே, ரிலையன்ஸ் – கூகுள் இடையிலான ஒப்பந்தத்திற்கான முக்கிய இலக்கு என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டு பொது கூட்டத்தின் போது சுந்தர் பிச்சை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



















