சினிமா செய்திகள்
‘மாஸ்டர்’ படத்தின் வைரல் சீன் டெலிட் செய்யப்பட்டதற்கு நான் காரணமா?- கெளரி விளக்கம்
Published
2 years agoon
By
Barath
மாஸ்டர் திரைப்படத்தில் கொண்டாடப் பட வேண்டிய சீன் ஒன்று டெலிட் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் மாஸ்டர் திரைப்படத்தில் டெலிட் செய்யப்பட்ட சீன் ஒன்று சமீபத்தில் வைரலானது. இந்த சீன் எதற்காக டெலிட் செய்தீர்கள் என மாஸ்டர் படக்குழுவினரைக் கடிந்து கொண்டனர் ரசிகர்கள். இந்த சீன் டெலிட் செய்யப்பட்டதற்கு காரணமே அந்தக் காட்சியில் சவீதா ஆக நடித்து இருந்த நடிகை கெளரி தான் என ஒருபுறம் நெட்டிசன்கள் கெளரியைத் திட்டத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், இதுகுறித்து தற்போது நடிகை கெளரியே விளக்கம் அளித்துள்ளார். கெளரி கூறுகையில், “அந்த சீரியஸான ப்ரின்சிபால் ரூம் சீனில் விஜய் சார் கோவமாகப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது நான் சிரித்ததால் அந்த சீன் டெலிட் செய்யப்பட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை. அந்த காட்சி படமாக்கப்பட்ட போது ‘கட்’ சொன்ன உடன் வேகமாக நான் ரிலாக்ஸ் மோட்-க்கு மாறிவிட்டேன்.
கதாபாத்திரமாக நடித்துக் கொண்டிருந்த போது நான் சிரிக்கவில்லை. என்னால் அந்த சீன் டெலிட் செய்யப்படவில்லை” எனக் கூறி ரசிகர்களின் கொந்தளிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
You may like
-
ஹோட்டலுக்கு சாப்பிடப் போன மாஸ்டர் விஜய்… வைரல் வீடியோ…
-
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை போட்ட செம குத்து – தெறிக்கும் வீடியோ
-
ஹீரோ ஆன திண்டுக்கல் லியோனி மகன்… அறிமுகம் செய்யும் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்!
-
மாஸ்டர் பட ‘பவானி’ விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்..!
-
‘மாஸ்டர்’ படத்தை அமேசான் ப்ரைம்-ல் இதுவரை எத்தனைப் பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?
-
மாஸ்டர் படத்துக்கு அடுத்த பிரச்னை… தயாரிப்பாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..!