சினிமா
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை போட்ட செம குத்து – தெறிக்கும் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரையும் ஈர்த்தது. குழந்தைகள் முதல் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு பல மாதங்கள் முன்பே வாத்தி கம்மிங் பாடல் வீடியோ வெளியாகி யுடியூப்பில் வைரல் ஹிட்டானது. பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில், கோலி சோடா படத்தில் நடித்த நடிகை சாந்தினி இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடந்த வருடம் மே மாதமே வெளியாகிவிட்டது. ஆனால், அஜித் ரசிகர்களில் சிலர் தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.