இந்தியா
இன்று சர்வதேச யோகா தினம்: மைசூரில் யோகா செய்த பிரதமர் மோடி!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில் பல மக்கள் யோகா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த தினம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எட்டாவது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்த தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை ஒவ்வொரு நகரில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி இந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள மைசூர் அரண்மனை வளாகத்தில் யோகா செய்து வருகிறார்.
பிரதமர் மோடியுடன் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா செய்தனர் என்பதும் இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ’உலக அளவில் யோகா ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்றும் யோகா இந்த உலகின் அனைத்து பகுதிகளிலும் அமைதியை இணைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றும் அனைத்து நாடுகளும் யோகா தினத்தை கொண்டாடுவதற்காக நன்றி கூறுகிறேன் என்றும் பிரதமர் மோடி கூறினார்.