இந்தியா
பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத இயக்கம்: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத இயக்கம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத இயக்கம் என்று தெரிவித்ததற்கு தமிழக அரசியல்வாதிகள் பொங்கி எழுந்தனர் .
இந்த நிலையில் இன்று கேரள உயர்நீதிமன்றம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இரண்டு இயக்கங்களும் தீவிரவாத இயக்கம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் என்பவரின் மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்த நிலையில் இந்த விசாரணையின் போது வன்முறை போன்ற தீவிரவாத குற்றங்களை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ இயக்கங்கள் செய்து வரும் போதும் அவை தடை செய்யப்படவில்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








