தமிழ்நாடு
‘ஊர்தியில் ஊதாரி’: பெரியார் குறித்து வைரலாகும் ஹேஷ்டேக்!

சென்னையில் இன்று நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பில் பெரியார் சிலை இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நெட்டிசன்கள் ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஸ்டேக்க்கை டிரெண்டாகி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விடுதலை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பெரியார் வழி நடத்துவது போன்ற ஒரு ஊர்தி தற்போது குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது ஆகஸ்ட் 15ஆம் தேதி துக்க தினம் என தனது திராவிடன் இதழில் பதிவு செய்த பெரியாரை விடுதலைப் போரில் தமிழகம் என்ற அணிவகுப்பில் இடம் பெற வைத்திருப்பது சர்ச்சைக்குரியது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் உருவங்கள் இடம்பெறுவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் ஆனால் விடுதலைப்போராட்டத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பெரியாரின் உருவம் அணிவகுப்பில் இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்ன பதிலளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பெரியார் இந்தியை எதிர்த்தார் என்றும், தமிழையும் எதிர்த்தார் என்றும், திருக்குறளையும் எதிர்த்தார் என்றும், சுதந்திரத்தை எதிர்த்தார் என்றும் அண்ணாவையும் எதிர்த்தார் என்றும் திமுகவையும் எதிர்த்தார் எதிர்த்தார் என்றும் அப்படிப்பட்டவரின் உருவம் திமுக ஆட்சியில் நடைபெறும் அணிவகுப்பில் இடம் பெற்றது ஏன் என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.







