Connect with us

செய்திகள்

பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராளிகளுக்கு தவெக விஜய் நேரில் சென்று ஆதரவு-போராட்ட அரசியல் சூடுபிடிக்கிறது.

Published

on

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்துார், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 5100 ஏக்கர் பரப்பளவில் பரந்துார் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நிலம் எடுப்பு தொடர்பான அரசாணைகள் வெளியாகி உள்ளன. நீர்வளத்துறை அதிகாரிகள் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணியிலும் வருவாய்த் துறையினர் வீடுகளை அளவிடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பரந்துார் விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களின் போராட்டம் 900 ஆவது நாளை எட்டியுள்ளது.

சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் இந்த விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதை உடனடியாக நிறுத்தக் கோரி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நிலம் கையகப்படுத்தப்பட்டால் 13 கிராமங்களையும்  சேர்ந்த மக்கள் அணைவரும் ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை விட்டே  வெளியேறி விடுவோம் என்றும் மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இம்மாதத்தில் வரும் 19 மற்றும் 20 தேதிகளில் தவெக வலைவர் விஜய் போராட்டக் காரர்களை சந்தித்து ஆதரவுக் கரம் நீட்டி பேச உள்ளார்.  இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்னமும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து உரிய அனுமதி கிடைக்கப்பெறவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கிடையில் தவெக நிர்வாகிகள் பரந்துார் சென்று போராட்டக் காரர்களை சந்தித்து பேசி உள்ளனர். விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர். இந்த விவரங்களை தலைவர் விஜயிடம் அளிக்க உள்ளனர்.

இதற்கிடையில் தலைவர் விஜய்க்கு பரந்துார் செல்ல அனுமதி கிடைக்காததால் நிர்வாகிகள் சென்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அரசிடம் உரிய அனுமதி பெற்று தலைவர் போராட்டக்காரர்களை சந்திப்பார் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

போராட்ட அரசியல்  சூடுபிடிக்கிறது… இனி வரும்  நாள்களில்  பரபரப்புக்கு  பஞ்சமிருக்காது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்3 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
aaa mush love faq. Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). farm equipment transport minnesota.