தமிழ்நாடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20,000?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கியதுடன், வீடுகளில் மழைநீர் புகுந்ததன் விளைவாக ஏழை, எளிய மக்கள் அவதிப்பட்டு கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கவும்.
மேலும் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்கவும் என்றும், வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பை விரைந்து அளிக்கவும் என்றும், முக்கியமாக, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக 20,000 ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















