சினிமா செய்திகள்
தர்பார் போஸ்டரை உருவாக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு!

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் போஸ்டரை ரசிகர்கள் உருவாக்கும் போட்டியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் இடம்பெறும் சிறந்த டிசைன் அதிகாரப்பூர்வமான போஸ்டராக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதற்காக தர்பார் படத்தில் இருந்து ரஜினியின் இரண்டு அட்டகாசமான ஹெச்.டி. புகைப்படங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஒரு போஸ்டரில், போலீஸ் உடையில் கம்பீரமாக ரஜினி நடந்து வருவது போன்றும், மற்றொரு போஸ்டரில் நீதிமன்ற கூண்டில் நிற்பது போன்றும் காட்சிகள் உள்ளன.
சிவாஜி பட சமயத்தில் பார்த்த லுக்கில் ரஜினிகாந்த் இருப்பது பக்கா மாஸ் காட்டுகிறது.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படம் வெளிவரவுள்ள நிலையில், தர்பார் படத்தின் அப்டேட்கள் இப்போதே ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.





















