தமிழ்நாடு
ஒன்றரை மணி நேரம் ஆகியும் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை: எங்கு தெரியுமா?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல் மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரே ஒரு தொகுதியில் ஒரு வாக்கு கூட இன்னும் பதிவாகவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவானிசாகர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு தொடங்கி ஒன்றரை மணி ஆகியும் இன்னும் ஒரு வாக்காளர் கூட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
எதற்காக இன்னும் வாக்காளர்கள் வரவில்லை என்ற தகவலும் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள 13 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


















