இந்தியா
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக மே 10-இல் நடைபெறும்!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து இன்று காலை 11:30 மணிக்கு கர்நாடக மாநில தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் வெளியிட்டார்.

#image_title
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ராகுல் காந்தியின் பதவி பறிப்பு சம்ப அனுதாப அலை இருப்பதால் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முக்கியமான கட்சியாக களத்தில் உள்ளன.
இந்நிலையில் கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஏப்ரல் 20 ஆகும். வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 21, வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24-ஆம் தேதி என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.