இந்தியா
இந்த ஒரு தவறை செய்தால் வாழ்நள் முழுவதும் ரயில்வேயில் வேலை கிடைக்காது: அதிரடி அறிவிப்பு!

இந்த ஒரு தவறை மட்டும் செய்தால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தலைவர்கள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே ரயில் போராட்டங்களை அறிவிப்பார்கள் என்பதும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் தங்களது வாழ்நாளை தொலைத்துவிட்டு இருப்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ரயில் போராட்டங்கள் உள்பட ரயில்வே துறையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் ரயில்வேயில் வேலை செய்ய முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இனிமேலாவது வேலைதேடும் இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தந்திரங்களுக்கு ஆளாகாமல் ரயில் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கலந்துகொண்டால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறையில் வேலை செய்யும் வாய்ப்பை அவர்கள் இழப்பார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















