தமிழ்நாடு
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது; மத்திய அரசு திட்டவட்டம்!

என்ஆர்சி, சிஏபி, சிஏஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத் திருத்தங்களைச் செய்ததிலிருந்து, தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசும், மத்திய அரசிடம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
ஆனால், இன்று புதுவை எம்பி கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், “இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

















