தமிழ்நாடு
மத்திய அரசை விட, நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம்: நிதியமைச்சர் பிடிஆர் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் ஆகியது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இன்று தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசை காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம் இது திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாகும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#image_title
இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை 62,000 கோடி ரூபாயில் இருந்து 30,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த பட்ஜெட்டில், மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு 3,949 வீடுகள் 223 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி 20 லட்ச ரூபாயில் இருந்து 40 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அவர்.