இந்தியா
நாராயணசாமி மத்திய அரசிடம் நிதியே கேட்கவில்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுவையின் வளர்ச்சிக்காக முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் எந்தவிதமான நிதியும் கேட்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை மாநிலத்தில் அதிமுக, பாஜக கூட்டணி போட்டியிடும் நிலையில் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதில் பல பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவை மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் மாநில முதல்வராக இருந்த நாராயணசாமி எந்தவித நீதியும் கேட்கவில்லை என்று கூறினார்.
மேலும் பிரதமர் மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் புதுச்சேரி வளர்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். நிர்மலா சீதாராமனின் இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


















