இந்தியா
அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது. இதில் அதானி கடன் விவரங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதானி நிறுவனத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

#image_title
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர் தீபக் பாய்ஜ், அதானி குழுமத்துக்கு வங்கிகள் வழங்கியிருக்கும் கடன் விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்.பி.ஐ. சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.
இதன்பின், நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரனை அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவையில் எழுப்பும்போதெல்லாம், மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. அவையில் அமளி தொடங்கி விடுகிறது என கூறியுள்ளார்.