தமிழ்நாடு
சென்னை – புதுவை முதல் சரக்கு கப்பல்.. தென்மாவட்ட தொழிலதிபர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்..!

சென்னை – புதுவை இடையே சரக்கு கப்பல் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து முதல் கப்பல் புதுவைக்கு நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் இந்த சேவை தென் மாவட்ட தொழில் அதிபர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து இந்த இரு நகரங்களுக்கு இடையே கப்பல் செல்வதற்காக ரூபாய் 40 கோடியில் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு புதுவையில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு சோதனைக்கு கப்பல் சென்றது. இந்த சோதனை கப்பல் வெற்றி கரமாக சென்னை வந்தடைந்ததை அடுத்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை சமீபத்தில் தொடங்கியது.
குளோபல் லாஜிஸ்டிக் என்று நிறுவனத்தைச் சேர்ந்த ஹோப் செவன்’ என்ற கப்பல் வாரத்திற்கு இரண்டு முறை சென்னை புதுச்சேரி இடையே சரக்குகளை ஏற்று செல்லும் என்றும் இந்த இரு நகரங்களை கடப்பதற்கு 12 மணி நேரம் மட்டுமே பயண நேரமாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கப்பலில் மொத்தம் 106 கண்டெய்னர்கள்களை ஏற்றி வந்தது என்றும், அதில் அதில் 20 குளிரூட்டப்பட்ட கண்டைனர்கள்கள் என்றும் கூறப்படுகிறது. சென்னை புதுச்சேரி சரக்கு கப்பல் சேவை தென்மாவட்ட தொழிலதிபருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது. தென் மாவட்டத்தில் தயார்செய்யப்படும் பொருள்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றால் புதுவை வரை கண்டெய்னர்களில் கொண்டு வந்து அதன்பின் சிறிய கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் அல்லது புதுவையில் இருந்து கண்டெய்னர் மூலம் சென்னைக்கு செல்லும்.
கண்டெய்னர் மூலம் சென்னைக்கு செல்வதால் ஒரு கண்டெய்னருக்கு ரூ.30,000 செலவு ஆவது மட்டுமின்றி சென்னை புதுவை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் புதுவையில் இருந்து நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கண்டனர் செல்லும் என்பதால் தென் மாவட்ட தொழிலதிபர்கள் தங்களது தயாரிப்புகளை புதுவை வரை கண்டெய்னர்கள்களில் கொண்டு வந்தால் போதும் அதன் பின் இந்த கப்பலில் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பயண நேரம் மிச்சம் ஆவதும் பொருள் செல்லவும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதுவை துறைமுகத்தில் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் வேலை நடைபெறுவதால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.