சினிமா செய்திகள்
ஸ்ருதிஹாசன் படத்துக்கு நக்சல்கள் மிரட்டல்… குவிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!

நடிகை ஸ்ருதிஹாசன் படம் ஒன்றின் படப்பிடிப்பு தளத்துக்கு நக்சல்கள் மிரட்டல் விடுத்துள்ளதால் படக்குழுவினருக்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு மொழியில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து ‘சலார்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். சலார் படம் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள படம். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை கே.ஜி.எஃப் படப் புகழ் கோலார் தங்கச் சுரங்கம் பகுதிகளில் எடுக்கத் திட்டமிட்டு இருந்தார்களாம்.
அங்கு முடியாததால் ஆந்திராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் அருகே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம். இந்தப் படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளைச் சுற்றி நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரபாஸ் மற்றும் தயாரிப்பு தரப்பினர் சார்பில் காவல் துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், 40 போலீஸார் வரையில் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

















