தமிழ்நாடு
அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொல்ல சதியா? மாட்டிய 5 பேர்!

கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்று கோவை மற்றும் திண்டிவம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினார்கள். கடந்த சில மாதங்களாக புலனாய்வுத்துறை நடத்திய சீக்ரெட் ஆபரேஷனின் ஒரு கட்டமாக இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையின் முடிவில் கோவையை சேர்ந்த சில இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு சிலரை கைது செய்துள்ளது. இவர்களை கைது செய்வதற்கு முன், தேசிய புலனாய்வு அமைப்பு அவர்களை மிகவும் தீவிரமாக கடந்த சில மாதங்களாக கண்காணித்ததாக கூறப்படுகிறது.
கோவை வெரைட்டி ஹால் சாலை சுந்தரம் வீதி, சுங்குவார் சந்து பகுதியில் வசித்து வருபவர் ஆசிக். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியாக இருக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இவரை கடந்த சில மாதங்களாக தேசிய புலனாய்வு துறை தீவிரமாக கண்காணித்து வந்தது.




















