தமிழ்நாடு
ஜெயலலிதா இருந்திருந்தால் மீசையை நறுக்கி இருப்பார், டயரை பார்த்து வணங்கிய கூட்டம் இது: திமுக கடும் விமர்சனம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வா என ஆவேசமாக பேசினார். இவரது இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பதிலடி கொடுத்த நிலையில் திமுகவின் பத்திரிக்கையான முரசொலி தற்போது கடுமையாக விமர்சித்துள்ளது.

#image_title
ஆண்மை ஆராய்ச்சியாளர்! என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளது முரசொலி, அதில், இதைக் கேட்க ஜெயலலிதா இல்லையே! இருந்திருந்தால் மீசையை நறுக்கி இருப்பார். டயரை பார்த்து வணங்கிய கூட்டம் இது. ஹெலிகாப்டரைப் பார்த்து வணங்கிய கூட்டம் இது. அம்மாவைக் காலையில பார்க்கப் போறதா இருந்தா முந்தின நாள் கூட சரியா சாப்பிட மாட்டோம், ஏப்பம் வந்திடக் கூடாதுல்ல, என்று அப்போது ஒரு அமைச்சரே சொன்னதாகச் சொல்வார்கள். ஜெயலலிதா இறந்தபிறகு அவரையே ஏப்பம் விட்டவர்கள் என்பதை நாடறியும்.
இவனுக எல்லாரும் டயர் நக்கிகள் என்று அன்புமணி ராமதாஸ் சொன்ன போது இவர்களுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தைலாபுரம் தோட்டத்தில் தலைவாழை இலை போட்டுச் சாப்பிட்ட போது இந்த சவடால்தனம் எங்கே போனது? ஏன் அப்போது நாக்கு எழவில்லை? மீசை தொங்கியது ஏன்? வேட்டியை கக்கத்தில் சுருட்டி வைத்துக் கொண்டு சாப்பிட்டார்களே? என்று அதிமுகவினரை கடுமையாக சாடியுள்ளது திமுகவின் முரசொலி தலையங்கத்தின் இறுதியில் சிலரிடம் தெருவில் சண்டை போடக் கூடாது என்பார்கள். அதனால்தான் அவரது பெயர் இங்கு பயன்படுத்தப்படவில்லை! என்று குறிப்பிட்டுள்ளனர்.


















