செய்திகள்
மும்பை ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்.. கடைசி நொடியில் காப்பாற்றிய ஹீரோ -வீடியோ
To all the people traveling by Mumbai local trains, be careful while you stand on the footpath. pic.twitter.com/qkDthV1CEJ
— Ninja with 4 As (@SecretNinjaaaa) October 3, 2018
மும்பை: மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் கவனக்குறைவு காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆச்சர்யமாக காப்பாற்றப்பட்டார்.
மும்பையின் காட்கோபர் மற்றும் விக்ரோலி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரயில் படிக்கு வெளியே எட்டி பார்க்க முயன்றுள்ளார். அப்போது திடீர் என்று எதிர்புறத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. எதிர்புற ரயிலில் அடிப்பட கூடாது என்று பின்வாங்கிய அவர் அப்படியே கீழே விழுந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு கைகளில் மட்டும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பெண் அதன்பின் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.




















