Connect with us

இந்தியா

மோடி எப்போதும் என் நண்பர்: ட்ரம்ப் யுடர்ன் – பிரதமர் மோடியின் சூசக பதில் கவனம் பெற்றது!

Published

on

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் என் நண்பர் என்று திடீரென யுடர்ன் அடித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவருக்கு பிரதமர் மோடி அளித்த சூசகமான பதில் தற்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

சமீபத்தில், பாகிஸ்தான் மீதான ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து தனக்கே புகழை பெற்றுக்கொண்ட ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்தது போன்ற காரணங்களால், இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. மேலும், மோடியின் அழைப்பை 4 முறை புறக்கணித்ததாக ட்ரம்ப் முன்பு குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப்,
“நான் எப்போதும் இந்தியாவுடன் நல்ல உறவை விரும்புவேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர். ஆனால் சில தருணங்களில் அவரின் செயல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், இந்தியா-அமெரிக்கா உறவு சிறப்பாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

அதற்கு பிரதமர் மோடியும் உடனடியாக பதிலளித்து, எக்ஸ் பக்கத்தில்,
“அதிபர் ட்ரம்பின் உணர்வுகளையும், இந்தியா-அமெரிக்கா உறவைப் பற்றிய அவரின் நேர்மறையான மதிப்பீட்டையும் நான் பாராட்டுகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்கா, விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

எனினும், ட்ரம்ப் பயன்படுத்திய “நண்பர்” என்ற சொல் மோடியின் பதிலில் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரம்பின் திடீர் யுடர்னும், மோடியின் நுணுக்கமான பதிலும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மறுசீரமைக்கும் வாய்ப்பைத் திறக்கக்கூடியதாக மதிக்கப்படுகிறது.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized14 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..