இந்தியா
“உலகம் காட்டாட்சிக்கு திரும்பக் கூடாது” – அமெரிக்க அதிபர் டிரம்பை மறைமுகமாக சாடிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
பீஜிங்: உலக அமைதி குறித்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், “உலகம் ஒருபோதும் காட்டாட்சிக்கு திரும்பக் கூடாது” என்று கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மறைமுகமாக சாடினார்.
ஜப்பானை எதிர்த்து சீனா பெற்ற இரண்டாம் உலகப் போரின் வெற்றியின் 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பீஜிங்கில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதற்கு சீன அதிபர் ஜின்பிங் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 26 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது ஜின்பிங் கூறியதாவது:
“வலிமையானவர்கள் பலவீனர்களை வேட்டையாடும் காட்டாட்சி உலகில் மீண்டும் நிலவக் கூடாது.”
“சீனாவின் வளர்ச்சியை யாரும் தடுக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது.”
“உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.”
“ஜப்பானுக்கு எதிரான இரண்டாம் உலகப் போரின் வெற்றி, வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் முதலாவது வெற்றியாகும். சீன மக்கள் உலக அமைதி மற்றும் நாகரிகத்தை காப்பதில் பெரிய பங்காற்றியுள்ளனர்.”
“உலக நாடுகள் அனைத்தும் சமமாக, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.”
இதற்கிடையில், இந்த ராணுவ அணிவகுப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைக்கப்படவில்லை. இதனால், சமூக வலைதளத்தில் டிரம்ப் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
