இந்தியா
பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருது.. ஐநா வழங்கியது

டெல்லி: பிரதமர் மோடிக்கு ஐநா சபை ” பூமியின் சாம்பியன்” என்று விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது.
உலகில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்த, மக்களின் மனதில் முக்கிய மாற்றத்தை உருவாக்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.இந்த நிலையில்தான் பிரதமர் மோடிக்கு ”பூமியின் சாம்பியன்” விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் நடந்த விழாவில் அவருக்கு இந்த விருது ஐநா மூலம் அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த வருடம் பிரதமர் மோடிக்கு மட்டுமில்லாமல் இன்னும் சிலருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. மோடி சோலார் பவர் திட்டங்களை அதிகம் செயல்படுத்தியதற்காகவும், இதனால் பெருமளவில் மாசு குறைந்துள்ளது என்றும் கூறி, இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.


















