இந்தியா
கிரிப்டோ கரன்ஸிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பரபரப்பு!

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வருமான வரி விதிப்பதாக அறிவித்திருந்தார்.
கிரிப்டோகரன்சிக்கு வரி விதிக்கப்படுவதால் அது சட்டபூர்வமானது என மாறிவிடும் என்று சிலர் கருதினார். ஆனால் வரி விதிக்கப்படுவதால் கிரிப்டோகரன்சி சட்டபூர்வமாகாது என்றும், கிரிப்டோகரன்சியின் பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே வரை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை செய்வதோ தடை செய்யாமல் இருப்பதோ, தகுந்த ஆலோசனைக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















