இந்தியா
மருத்துவ காரணத்துக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. – உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் 2 பேர் மனுத் தாக்கல் செய்தனர். அதில் தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாக கருதி ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.
விசாரைணக்குப் பறகு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது
அரசு ஊழியர்களுக்கான விதிகளில் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா அகிய சொற்றொடர்கள் வெவ்வேறு பொருட்களை உணர்த்துகின்றன. தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய விதிகளில் உடல் அல்லது மனம் பலவீனம் போன்ற மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ராஜினாமா செய்பவருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மற்ற மருத்துவக் காரணங்களைக் கூறி ராஜினாமா செய்தவர் முந்தையபணிக்காலத்தை இழந்து விடுவதால் ஓய்வூதிய பலன்கள் கோர முடியாது.
இவ்வாறு நீதிமன்ற பெஞ்ச் தெளிவுபடுத்தி மனுக்களை தள்ளுபடி செய்தது.


