Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 11.02.2026

Published

on

  1. உதகை கூடலூர் அருகே ஆங்கிலேயர் காலத்தில் இயங்கி வந்த தங்க சுரங்கங்கள் கைவிடப்பட்டிருந்த புகுதிகளில் வனப்பகுதிக்குள் உள்ள மலைகளை குடைந்து 60க்கும் மேற்பட்ட புதிய தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்ட நிலையில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு.
  2. கலிபோர்னியா சொத்து சட்டங்களை மீறி ஸ்ரீதர் வேம்பு தனக்குத் தெரியாமல் ஜோஹோ பங்குகளை இந்தியாவில் உள்ள தனது உடன்பிறப்புகளுக்கு மாற்றியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனைவி பிரமீளா தரப்பு வாதம்
  3. கோவை-திருப்பூரில் கடந்த 3 வாரமாக நூல் விலை 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதால் இன்று முதல் 50சதவீத ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என அறிவிப்பு
  4. மார்ச் 12 முதல் 15 ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு தேதி 22 , 23, 24 என மாற்றி அமைப்பு
  5. லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். அவர்களது மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
  6. வந்தே மாதரம் பாடல் குடியரசுத் தலைவர், ஆளுநர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தேமாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் தேசீய கீதம் பாடுவதற்கு முன்பாக வ்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும். – உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்.
  7. சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான ஒற்றைச் செயலியாக CHENNAI ONE அறிமகம் செய்யப்பட்டு 5 மாதங்களுக்குள் 50 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் அதில் பெறப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 10 லட்சத்திற்கம் அதிகமான டிக்கெட்டுகள் பெற்றுள்ளனர்.
  8. மொழிக்காக போராடுவதை நோய் என்பதா? தமிழ்நாட்டின் பிராந்திய உணர்வை அவமதித்தால் மோதல் வெடிக்கம். ஆர்எஸ்எஸ் தலைவUக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை.
  9. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.14600க்கும் சவரன் ரூ.116800க்கும் விற்பனை ஆகிறது.
  10. இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.300000க்கும் விற்பனை ஆகிறது.
  11. விஜய் தேவரகொண்டா ராஷ்மஜகா பந்தனாவிற்கு வரும் 26ம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்புர் போட்டையில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆவணப்படம் எடுக்க நெட்பிளிக்ஸ் ஒப்பந்தம்.
  12. ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Leads and pass.