சினிமா
மஞ்சிமாவின் புது ஹீரோ யார் தெரியுமா?

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். மேலும் சத்திரியன் என்னும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியகவும், இப்படை வெல்லும் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும் நடித்தவர்.
இப்போது குறும்பட இயக்குனர் ராஜேஷ் இயக்கதில் ஜீவா, அருள்நிதி சேர்ந்து நடிக்கும் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆனால், இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடி யார் என்பதை இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை. ஒருவேளை தேடுதல் பணிகள் நடைபெறலாம்.
















