சினிமா
பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்…திரையுலகினர் இரங்கல்…

தமிழில் பல சினிமா பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடியவர் மாணிக்க வினாயகம். திருடா திருடி, கிரி, திமிறு, வேட்டைக்காரன், யுத்தம் செய் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவருக்கு வயது 73.சமீபத்தில் இவருக்கு இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரை உலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
















