இந்தியா
ஓடும் பேருந்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்.. போலீஸ் வரும்வரை காத்திருந்து கைது!
Published
1 month agoon
By
Shiva
ஓடும் பேருந்தில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசார் வரும் வரை காத்திருந்து கைதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் என்ற பகுதியில் கணவன் மனைவி இருவரும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென சண்டை வந்தது. மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகமடைந்ததாகவும், மனைவியிடம் அது குறித்து கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கணவர் ஆத்திரம் அடைந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு அனைவரும் கீழே இறங்கி விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது போலீஸ் வரும் வரை காத்திருந்து அந்த நபர் கைதானார். இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது அவருடைய பெயர் அம்ருத் என்றும் அவரது மனைவி மீது சந்தேகம் அடைந்து கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You may like
-
மின்சார கட்டணம் செலுத்தாததால் அடித்தே கொல்லப்பட்ட முதியவர்: அதிர்ச்சி சம்பவம்!
-
50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த டாக்டர்.. செஞ்சுரி அடிக்க போவதாக பேட்டி!
-
அடக்கடவுளே! போலீஸ் ஸ்டேஷன் அருகே துப்பாக்கிச்சூடு; பிரபல நடிகை பரிதாப பலி
-
கணவரின் செல்போனில் ஆண்களின் நிர்வாணப்படம்.. அதிர்ச்சி அடைந்த மனைவியின் அதிரடி நடவடிக்கை
-
10,000 ஆயிரம் பேரை கொலை செய்ய உதவி செய்த பெண்: வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை!
-
மொபைல் போன் திருடனை ரயிலில் இருந்து தூக்கி எறிந்த பயணிகள்: அதிர்ச்சி சம்பவம்