இந்தியா
ஆம்புலன்ஸுக்கு தொடர்ந்து வழி விடாத கார் ஓட்டுனர்… அதிர்ச்சி வீடியோ…

பொதுவாக ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் சாலையில் கேட்டாலே வாகன ஓட்டிகள் ஒதுங்கி வழிவிடுவதுதான் உலக வழக்கம். ஏனெனில், அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் உயிருக்கு போராடும் ஒருவர் இருப்பார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழி விடுகிறோம். ஆனால், சில ஈவு இரக்கமற்ற நபர்கள் ஆம்புலன்ஸ் வண்டிக்கும் வழி விடாமல் சாலையை மறித்து செல்லும் சம்பவம் அவ்வப்போது உலகில் நடந்து வருகிறது.
சமீபத்தில் கர்நாடகாவில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தக்ஷினா மாவட்டத்தில் தொக்கொட்டு எனும் இடத்திலிருந்து பம்ப்வெல் எனும் இடத்திற்கு செல்லும் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த ஆம்புலன்ஸுக்கு முன்னே சென்ற ஒரு கார் ஓட்டுனர் வழி விடாமல் மறித்து மறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோவாக வெளியானது. எனவே, நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, அந்த கார் ஒட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் சரண்(31) என்பது தெரியவந்துள்ளது.
Mangaluru police arrested a person and seized a vehicle for obstructing an ambulance on the road. Police commissioner N Shashi Kumar appealed to everyone to always allow the right of way to Ambulances and Emergency vehicles as they are rushing to save lives. @IndianExpress pic.twitter.com/GaXU5xYniT
— Express Bengaluru (@IEBengaluru) July 20, 2021














