இந்தியா
எரிவாயு விலை இந்தியாவில் தான் அதிகம்.. அதிர்ச்சி தகவல்!
எரிவாயு விலை உலகின் 54 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி 54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிவாயு விலை அதிகமாக உள்ளது.
முன்னேறிய நாடுகளான பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் எரிவாயு விலை அதிகமாக உள்ளது. சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் சராசரி மதிப்பு 22.6 ரூபாய்.
இந்தியாவில் 1 கிலோ எரிவாயு விலை 77 ரூபாயாக உள்ளது. இதுவே ஸ்பெயினில் 31ரூபாய், ஜெர்மனியில் 22 ரூபாயாக உள்ளது. இதுபோல 154 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிவாயு விலை பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
டீசல் விலை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. இந்தியர்கள் தங்களது சராசரி வருவாயில் நான்கில் ஒரு பங்கை பெட்ரோலுக்கு செலவிடுகின்றனர் எனவும் சர்வதேச நிதியம் கூறியுள்ளது.