தமிழ்நாடு
தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகு: கனமழைக்கு வாய்ப்பு என தகவல்!

தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மீண்டும் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் லேசான மழை பெய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலும் நேற்று ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.















