இந்தியா
திடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் கேஸ் விலையும் உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி இருந்தனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டே வந்தது.
இந்த நிலையில் திடீரென இன்று நள்ளிரவு முதல் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படும் என லாரி வாடகை சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு லாரி வாடகை உயர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

















