தமிழ்நாடு
தேசிய கட்சியுடன் கூட்டணி ஆலோசனை நடக்கிறது.. ஓ.பி.எஸ் பேட்டி!

சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பலர் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது பேட்டியில், கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். மிகப்பெரிய கூட்டணியை நாங்கள் அமைப்போம், என்றுள்ளார்.










