தமிழ்நாடு
அதிமுக அணைந்து போன நெருப்பு: ஜெயக்குமாருக்கு அமர் பிரசாத் பதிலடி!

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் பட்டியல் வெளியிட்டு பேசியது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாஜக-அதிமுக இடையே நிலவி வந்த வார்த்தை மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பாஜகவை எச்சரிக்கும் விதமாக பேசிய அதிமுகவின் ஜெயக்குமாருக்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title
நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தேவையில்லாமல் எங்களை டச் பண்ணினால் நெருப்போடு விளையாடுற மாதிரி. நெருப்போடு விளையாடக்கூடாது என பாஜகவை எச்சரித்தார்.
இதனையடுத்து ஜெயக்குமார் பேசியதை விமர்சிக்கும் வகையில் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எங்களை தேவையில்லாம ‘டச்’ பண்ணினா நெருப்போட விளையாடற மாதிரின்னு அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைந்து போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே… முதல்ல நீங்க எரியும் நெருப்பாகிட்டு அப்புறம் வாங்க. நாங்க எப்படி விளையாடுவோங்கறதை ரசிச்சுப் பாருங்க என பதிலடி கொடுத்துள்ளார் அமர் பிரசாத் ரெட்டி.